'நீதிக்கு கிடைத்த வெற்றி' - கஃபீல் கானின் விடுதலை குறித்து மருத்துவர்கள் சங்கம்

உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கானின் விடுதலை 'நீதியின் வெற்றி' என்று ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஹம்ஸா மாலிக் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மருத்துவர் கபீல்கான்
உத்தரபிரதேச மருத்துவர் கபீல்கான்

உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கானின் விடுதலை நீதிக்கு கிடைத்த வெற்றி என ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சங்கத் தலைவர் ஹம்ஸா மாலிக் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்க அலகாபாத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஹம்ஸா மாலிக், கஃபீல் கான் விடுதலை "நீதியின் வெற்றி" என்று கூறியுள்ளார்.

மேலும், 'கஃபீல் கான் ஒரு மருத்துவராக எப்போதும் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவத் தொழிலுக்கு உண்மையாக இருந்தார். மக்களை பிளவுபடுத்தும் செயல்களில் அவர் ஒருபோதும் ஈடுபடவில்லை. 

கானை சிறையில் அடைந்ததற்கு பதிலாக, மாநிலத்தில் சுகாதார சேவை தேவைப்படும் நிலையில் அவரது மருத்துவ சேவையை பெற்றிருக்க வேண்டும்' என்றார். 

அதேபோன்று  அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பைசுல் ஹசன் கூறுகையில், 'உண்மை மற்றும் ஜனநாயகத்திற்கான வெற்றி' என்று கானின் விடுதலை குறித்து கூறியுள்ளார். 

கஃபீல் தனது ஜனநாயக உரிமையை எதிர்த்ததற்கு எதிராக போராடினாரே தவிர ஒருபோதும் ஜனநாயக விரோத வழிமுறைகளை நாடவில்லை. எப்போதும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வுடன் நடந்துகொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com