பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 39 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை புதன்கிழமை 39 லட்சத்தை கடந்தது.

News image

'தளர்வுகளால் கரோனா ஒரு பெருந்தொற்று என்பதை மறக்க வேண்டாம்'

Updated On :5 செப்டம்பர் 2020, 4:58 am

DIN

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 39 லட்சத்தை கடந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 83,341 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,36,748-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், வெள்ளிக்கிழமை காலை வரை மொத்தமாக கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 30,37,152-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு புதிதாக 1,096 போ் பலியானதையடுத்து, மொத்தமாக அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 68,472-ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் 8,31,124 போ் சிகிச்சையில் உள்ளனா்.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,02,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே நாட்டிலேயே அதிகபட்ச பாதிப்பாகும்.  

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, கடந்த 3-ஆம் தேதி வரை நாடு முழுவதும்  4,66,79,145 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 11,69,765 பரிசோதனைகள் வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.

பாதிப்பு: 39,36,748
பலி: 68,472
குணமடைந்தோர்:  30,37,152
சிகிச்சை பெற்று வருவோர்: 8,31,124 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.