தேசிய கல்விக் கொள்கை 21ஆம் நூற்றாண்டின் புரட்சிகர சீர்திருத்தம்: பிரகாஷ் ஜாவடேகர்

தேசிய கல்விக் கொள்கை என்பது 21ஆம் நூற்றாண்டின் ஒரு புரட்சிகர சீர்திருத்தம் ஆகும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ஜாவடேகர்
பிரகாஷ் ஜாவடேகர்

தேசிய கல்விக் கொள்கை என்பது 21ஆம் நூற்றாண்டின் ஒரு புரட்சிகர சீர்திருத்தம் ஆகும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள பார்லே திலக் பள்ளிகள் சங்கத்தின் நூறாவது ஆசிரியர்கள் தினக் கொண்டாட்டங்களில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய அவர், ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி, கேள்வி அடிப்படையிலான கல்வி, ஆசிரியர் பயிற்சி அளித்தல் மற்றும் எண் கல்வி அறிவு ஆகிய அனைத்திற்கும் தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

புதிய கல்விக் கொள்கை 2020 நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் 21ஆம் நூற்றாண்டை நோக்கி அவர்களை அழைத்து செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். கற்றல், கற்பித்தல் ஆகியவற்றை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக தேசியக் கல்வி கொள்கை ஆக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com