தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சத்தீஸ்கரில் பேருந்து விபத்து: 7 தொழிலாளர்கள் பலி

சத்தீஸ்கரில் லாரியுடன் பேருந்து மோதிய விபத்தில் 7 தொழிலாளர்கள் பலியானார்கள். 

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 2:03 pm

DIN

சத்தீஸ்கரில் லாரியுடன் பேருந்து மோதிய விபத்தில் 7 தொழிலாளர்கள் பலியானார்கள். 

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று குஜராத்தை நோக்கி புறப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்தப் பேருந்து சத்தீஷ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.