தெலங்கானா நிதியமைச்சர் ஹரிஷ் ராவுக்கு கரோனா பாதிப்பு
தெலங்கானா நிதியமைச்சர் டி.ஹரீஷ் ராவுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Telangana Finance Minister Harish Rao tests COVID-19 positive

Telangana Finance Minister Harish Rao tests COVID-19 positive
தெலங்கானா நிதியமைச்சர் டி.ஹரீஷ் ராவுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
கரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பரிசோதனை செய்தேன். அதில், கரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன.
ஆனால் என் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது.
கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்புகொண்ட அனைவரும், தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, கரோனா சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மருமகன் ஹரிஷ் ராவ் ஆவார்.
முன்னதாக கொடிய வைரஸுக்கு தெலங்கானா அமைச்சர்கள் இருவர் சிகிச்சைக்குப் பின்னர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...