

புதுதில்லி: நாடு முழுவதும் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் மோசடியில் ஈடுபட்ட 50 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்ததாவது:
நாடு முழுவதும் ரேக் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலம் கட்டணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் உள்பட 50 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைனில் சட்டவிரோத ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடியில் ஈடுபட்ட கும்பலை ரயில்வே பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை முறியடித்துள்ளனர்.
"மோசடி கும்பலின் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டு அதன் அமைப்பு அழிக்கப்பட்டு 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தேசிய அளவிலான நடவடிக்கையாகும். அவர்கள் ரேக் மாங்கோ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி பிட்காய்ன்ஸ் மூலம் கட்டணத்தை பெற்றுள்ளனர், இதனால் அவர்களின் பணப் பரிமாறறத்தை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று குமார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.