செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஒரு நாள் கரோனா பாதிப்பு: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மட்டும் 61% நோயாளிகள்

நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா பாதிப்பில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் மட்டும் 61 சதவீத நோயாளிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

ஒரு நாள் கரோனா பாதிப்பு: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மட்டும் 61% நோயாளிகள்

Updated On :9 செப்டம்பர் 2020, 12:37 pm

ANI


நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா பாதிப்பில் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் மட்டும் 61 சதவீத நோயாளிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 89,706 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், உத்தரப்பிரதேசம், தமிழகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் 61 சதவீத நோயாளிகள் உள்ளனர். 

நாடு முழுவதும் தற்போது கரோனா பாதித்து 8,97,394 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 2,40,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதுபோலவே நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,115 பேர் பலியாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 380 பேரும், கர்நாடகத்தில் 146 பேரும், தமிழகத்தில் 87 பேரும் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.