அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

'துர்கா பூஜை இல்லை என்று கூறியதை நிரூபித்தால் 100 தோப்புக்கரணம் போடுகிறேன்' 

துர்கா பூஜை கொண்டாட்டங்கள் இல்லை என்று கூறியதாக சொல்வதை நிரூபித்தால் மக்கள் முன்னிலையில் 100 தோப்புக்கரணம் போடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
'துர்கா பூஜை இல்லை என்று கூறியதை நிரூபித்தால் 100 தோப்புக்கரணம் போடுகிறேன்'
Updated On :9 செப்டம்பர் 2020, 9:11 am

ANI


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாட்டங்கள் இல்லை என்று கூறியதாக சொல்வதை நிரூபித்தால் மக்கள் முன்னிலையில் 100 தோப்புக்கரணம் போடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜை குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான புரளிகளைப் பரப்பி வருகின்றன. ஆனால், அதுபற்றி முடிவு செய்ய இதுவரை எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு துர்கா பூஜை இல்லை என்று மேற்கு வங்க அரசு கூறியதாக நிரூபித்தால், மக்கள் முன்னிலையிலேயே நான் 100 தோப்புக்கரணம் போடுகிறேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதுபோன்ற போலியான சமூக வலைத்தளப் பக்கங்கள் குறித்து விசாரிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை தோப்புக்கரணம் போட வைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.