மகாராஷ்டிரத்தில் மேலும் 189 காவலர்களுக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 189 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

189 more Maharashtra Police personnel test positive for COVID-19

189 more Maharashtra Police personnel test positive for COVID-19
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 189 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இதனால் அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர காவல்துறையில் மேலும் 189 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மகாராஷ்டிர காவல்துறையில் இதுவரை 18,405 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி 185 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் 14,608 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 3,612 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...