ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்வு!

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 செப்டம்பர் 2020, 11:39 am

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 51,18,253 பேரில் 40,25,079 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த இரு தினங்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 82,000-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து கரோனா மீட்பு விகிதம் 78.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,09,976 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 97,894 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 51,18,253 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,132 பேர் உள்பட இதுவரை 83,198 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்

பாதிப்பு:  51,18,253
பலி:  83,198
குணமடைந்தோர்: 40,25,079
சிகிச்சை பெற்று வருவோர்:  10,09,976

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.