6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் பதவி விலகல் எச்சரிக்கை

விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் பதவி விலகுவார் என கூட்டணியில் உள்ள அரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது.

News image
சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல்
Updated On :17 செப்டம்பர் 2020, 4:12 pm

DIN

விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் பதவி விலகுவார் என கூட்டணியில் உள்ள அரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகுவார் என சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் பதவி விலகல் குறித்த அறிவிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.