வாடிக்கையாளர்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்: பேடிஎம்
பேடிஎம் வாடிக்கையாளர்கள் அனைவரது பணமும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


பேடிஎம் வாடிக்கையாளர்கள் அனைவரது பணமும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
விளையாட்டு சூதாட்ட விதிமுறைகளை மீறியதாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் நீக்கப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனைக்காக சிறு வியாபாரிகள் முதல் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வந்த பேடிஎம் செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து பேடிஎம் நிர்வாகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், பேடிஎம் செல்லிடப்பேசி செயலி தற்காலிகமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிதாக செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய இயலாது, விரைவில் கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் இடம்பெறும்.
அனைத்து வாடிக்கையாளர்களின் பணமும் பத்திரமாக இருக்கும். ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல பேடிஎம்-ஐ பயன்படுத்தலாம்.
இது தற்காலிக நடவடிக்கைதான் என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் பேடிஎம் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...