நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தில்லியில் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை 

தில்லியின் மால்வியா நகரில் வியாழன் இரவு காவலர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image

Constable dies by suicide in Delhi's Malviya Nagar

Updated On :18 செப்டம்பர் 2020, 7:28 am

ANI

தில்லியின் மால்வியா நகரில் வியாழன் இரவு காவலர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மால்வியா நகரில் உள்ள பணி முடிந்து தனது வீடு திரும்பிய காவலர், சற்று நேரத்திலேயே  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை தொடர்பாக பி.எஸ்.மால்வியா நகரில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று காவலரை அருகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

முதற்கட்ட விசாரணையில் காவலர் மத்திய மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார் என்பது தெரிய வந்தது. மேலும், தற்கொலைக்கான காரணம் என்னவென்று, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.