3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

பிட் எழுதலாம், ஆனால் காதில் கிசுகிசுப்பதை தவிர்த்துவிடுங்கள்: வெங்கையா நாயுடு

துண்டு சீட்டில் எழுதுவது தேர்வறைகளில் வேண்டுமானால் தடை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் மாநிலங்களவையில், உறுப்பினர்கள் துண்டுச் சீட்டில் எழுதி தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம் என்று அவைத் தலைவர் வெங்

News image

பிட் எழுதலாம், ஆனால் காதில் கிசுகிசுப்பதை தவிர்த்துவிடுங்கள்

Updated On :18 செப்டம்பர் 2020, 7:50 am

PTI


புது தில்லி: துண்டு சீட்டில் எழுதுவது தேர்வறைகளில் வேண்டுமானால் தடை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் மாநிலங்களவையில், உறுப்பினர்கள் துண்டுச் சீட்டில் எழுதி தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருவரது இருக்கைக்கு மற்றொருவர் செல்வதை தவிர்த்து விடுங்கள், வேறு ஏதேனும் அவசர தகவல் என்றால், துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து தகவலைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மாநிலங்களவை நடந்து கொண்டிருக்கும் போது, முன்பகுதிக்கு வர வேண்டாம், அதுபோலவே உறுப்பினர்களும், மற்றொரு உறுப்பினரின் இருப்பிடத்துக்குச் சென்று அவரது காதுகளில் கிசுகிசுப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

யார் யாரிடம் பேச வேண்டும் என்றாலும் துண்டுச் சீட்டைப் பயன்படுத்துங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.