டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 52 லட்சத்தைக் கடந்தது

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,14,678 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 96,424 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2020, 4:57 am

DIN

புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,14,678 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 96,424 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52,14,678 -ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,174  போ் உயிரிழந்தனா். 

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு  84,372-ஆக அதிகரித்தது.  

நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 41,12,552-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 10,17,754 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். நாட்டில் கரோனா பாதிப்புடன் உள்ளவா்கள் 10 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சத்தை எட்டியது. செப்டம்பா் 5-இல் 40 லட்சம் என்ற அளவைக் கடந்தது. செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சத்தையும் கடந்தது. இப்போது 52 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி செப்டம்பா் 17-ஆம் தேதி வரை 6,15,72,343 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 17-ஆம் தேதி மட்டும் 10,06,615 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.