திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் நீக்கம்

சிறு வியாபாரிகளுக்கு மிக அதிர்ச்சி தரும் வகையில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலியை கூகுள் நீக்கியுள்ளது. 

News image
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் நீக்கம்
Updated On :18 செப்டம்பர் 2020, 9:47 am

DIN


சிறு வியாபாரிகளுக்கு மிக அதிர்ச்சி தரும் தகவலாக, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலியை கூகுள் நீக்கியுள்ளது. 

செல்லிடப்பேசி செயலியாக துவங்கிய பேடிஎம், வங்கிச் சேவையையும் அளித்து, பணப்பரிமாற்றத்தை எளிமையாக்கியது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் சட்டதிட்டங்களை மீறியதாக பேடிஎம் மீது புகார் எழுந்ததாகவும், விதிமீறல் காரணமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு சூதாட்டம் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் மீறியதாக தெரிவித்திருக்கும் கூகுள், நாங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை அனுமதிக்க மாட்டோம். மற்றும்  விளையாட்டு பந்தயத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு வரையறுக்கப்படாத சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம். ஒரு செல்லிடப்பேசி செயலி, அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரை வெளியில் இருக்கும் மற்றொரு வலைத்தளத்திற்கு இட்டுச் சென்றால் அதன் மூலம் பந்தயத்தில் ஈடுபடுத்துதல் அல்லது பணப் பரிசுகளை வெல்லலாம் என்று கூறி ஆன்லைனில் விளையாட வைத்தல் அல்லது பணம் செலுத்தி விளையாடும் போட்டிகளில் பங்கேற்க அனுமதித்தால், அது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதே சமயம், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் நீக்கப்பட்டாலும், ஆப் ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.