டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நாட்டில் கரோனா பாதிப்பு 53 லட்சத்தைக் கடந்தது: ஒரே நாளில் 1,247 பேர் பலி 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,08,015 -ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 93,337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2020, 4:36 am

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,08,015 -ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 93,337 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:

கரோனாவில் இருந்து 42,08,432 போ் இதுவரை மீண்டுள்ளனா். மொத்த கரோனா பாதிப்பில் இது 78.86 சதவீதமாகும். சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,247 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 85,619 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது.

தற்போது 10,13,964 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 19.52 சதவீதமாகும். 

மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கா்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்தான் கரோனா தொற்று அதிகம் உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் 59.3 சதவீதம் போ் இந்த 5 மாநிலங்களில்தான் உள்ளனா். அதே நேரத்தில் அந்த மாநிலங்களில்தான் குணமடைந்தோா் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 6,24, 54, 254 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 8,81,911 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.