தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தில்லி: வெங்கையா நாயுடுவுடன் எடியூரப்பா சந்திப்பு

குடியரசு துணைத்தலைவருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

Updated On :19 செப்டம்பர் 2020, 6:39 am

DIN

குடியரசு துணைத்தலைவருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடந்த இரண்டு நாள்கள் பயணமாக தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். கடந்த வியாழக்கிழமை தில்லி சென்றடைந்த அவர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்தார்.

இதனைத்தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று (சனிக்கிழமை) சந்தித்து பேசினார். 

தில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களுக்கு முதல்வர் எடியூரப்பா பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கர்நாடக மாநிலத்தின் தேவைகளை குடியரசு துணைத்தலைவரிடம் முன்வைத்தேன். மாநிலத்திற்காகன அமைச்சரவை விரிவாக்கம் குறித்த எனது திட்டங்களை விவரித்தேன். இது குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பு செயல்படுத்தப்படும் என்றும் அவரிடம் கூறினேன். என்று எடியூரப்பா தெரிவித்தார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதல்வர் எடியூரப்பா பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.