டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கேரளம், மேற்கு வங்கத்தில் 9 அல்-கய்தா பயங்கரவாதிகள் கைது

கேரளத்தின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதிகளில் நடத்திய சோதனையில், 9 அல்-கய்தா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

News image
கேரளம், மேற்கு வங்கத்தில் 9 அல்-கய்தா பயங்கரவாதிகள் கைது
Updated On :27 ஜனவரி 2024, 5:22 pm

ANI


கேரளத்தின் எர்ணாகுளம் மற்றும் மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் பகுதிகளில் நடத்திய சோதனையில், 9 அல்-கய்தா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் திரட்டுவது மற்றும் புது தில்லி சென்று ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பின் சமூக வலைத்தளங்கள் மூலமாக பயங்கரவாதிகளாக மாறி, நாட்டின் தலைநகர் உள்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்தும் சதிக்கு திட்டமிட்டுவந்துள்ளனர்.

கேரளத்தில் இருந்து முர்ஷித் ஹசன், இயக்கூப் பிஸ்வாஸ், மொஸாரஃப் ஹோஸ்ஸி ஆகிய மூவரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.முர்ஷிதாபாத்தில் இருந்து நஜ்முஸ், சூஃபியான் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து மிகப் பயங்கர ஆயுதங்களும், வெடிபொருள்கள் தயாரிப்புக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.