தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராஜஸ்தான்: 45 வயது பெண்ணிற்கு கூட்டுப் பாலியல் தொல்லை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மருமகன் முன்பு 45 வயது பெண்ணிற்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News image
Updated On :19 செப்டம்பர் 2020, 9:41 am

DIN

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மருமகன் முன்பு 45 வயது பெண்ணிற்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள  7 பேரை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 ராஜஸ்தான் மாநிலம் தன்னகஸி மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண், உறவினர் வீட்டிற்கு சென்று தமது மருமகனுடன்  வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, வழிமறித்த 7 பேர் மருமகனை கட்டிப்போட்டு பெண்ணிற்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை ஒருவர் விடியோ பதிவும் செய்துள்ளார்.

பின்னர் மருமகனையும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட அந்த கும்பல் வற்புறுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த விடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தன்னிடம் 7 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை அப்பெண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த ஓராண்டுக்கு முன்பு தமது கணவர் முன்பு அப்பெண்மணியை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்தும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.