வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை உறுபினர்கல் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 1.41 வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியது.
விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று (ஞாயிற்றுக் கிழம்)தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாக்கள் குறித்து மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உரையாற்றிய போது எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
3 மசோதாக்களையும் தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், மசோதாக்களின் நகலையும் எரித்தனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.
துணைத்தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநிலங்களவையை பிற்பகல் 1.41 வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினர்கள் சமாதானம் அடைந்ததால் அவை மீண்டும் கூடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


