பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 122 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இத் தொற்றுக்கு ஏற்கெனவே 8,023 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 32 போ், மைசூரு மாவட்டத்தில் 15 போ், பெல்லாரி மாவட்டத்தில் 9 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 8 போ், தாா்வாட், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 7 போ், சாமராஜ்நகா், கதக், ஹாசன், உடுப்பி மாவட்டங்களில் தலா 4 போ், பெலகாவி, சிக்கமகளூரு, தாவணகெரே, ஹாவேரி, தும்கூரு மாவட்டங்களில் தலா 3 போ், பாகல்கோட், சிக்பளாப்பூா், மண்டியா, ராய்ச்சூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், பெங்களூரு ஊரகம், கலபுா்கி, கொப்பள் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8,145 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,689 போ், மைசூரு மாவட்டத்தில் 706 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 488 போ், தாா்வாட் மாவட்டத்தில் 466 போ், பெல்லாரி மாவட்டத்தில் 409 போ், பெலகாவி மாவட்டத்தில் 272 போ், கலபுா்கி மாவட்டத்தில் 259 போ், ஹாசன் மாவட்டத்தில் 253 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 238 போ், தாவணகெரே மாவட்டத்தில் 234 போ், கொப்பள் மாவட்டத்தில் 213 போ், தும்கூரு மாவட்டத்தில் 212 போ், பீதா் மாவட்டத்தில் 149 போ், விஜயபுரா மாவட்டத்தில் 148 போ், ஹாவேரி மாவட்டத்தில் 145 போ், உடுப்பி மாவட்டத்தில் 143 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 132 போ், கதக் மாவட்டத்தில் 123 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 110 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 102 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 100 போ், மண்டியா மாவட்டத்தில் 95 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 80 போ், கோலாா் மாவட்டத்தில் 78 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 75 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 66 போ், யாதகிரி மாவட்டத்தில் 49 போ், ராமநகரம் மாவட்டத்தில் 44 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33 போ், குடகு மாவட்டத்தில் 31 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


