6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மஹால் மீண்டும் இன்று திறக்கப்பட்டது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுலாத்தளங்கள், புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டன. ஆனால் ஊரடங்கு தொடங்கும் முன் மார்ச் 17ல் தாஜ்மஹால் மூடப்பட்டது.
தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்கலாம் என, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்தது. இந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மஹால் மீண்டும் இன்று திறக்கப்பட்டது.
கரோனா விதிகளை பின்பற்றி காலை முதல் சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை கண்டு ரசித்து வருகின்றனர். எனினும், தாஜ்மஹாலை காண நாள் ஒன்றிற்கு 5,000 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெண்டைக்காய் வெல்லுல்லி
விமானப் பயணத்தில் இப்படியுமா?

தமிழக மக்களைக் காக்கும் தலைவா் முதல்வா் ஸ்டாலின்: நடிகா் வாகை சந்திரசேகா்

கோலிவுட் ஸ்டூடியோ!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


