கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

வெண்டைக்காய் வெல்லுல்லி

முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

News image

வெண்டைக்காய் வெல்லுல்லி

Updated On :12 ஏப்ரல் 2026, 4:05 am IST

தேவையான பொருள்கள்:

வெண்டைக்காய் -கால் கிலோ

பெரிய வெங்காயம் - 1

கடுகு, உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு - தேவையான அளவு அரைக்க:

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

காஷ்மீர் மிளகாய்த் தூள் -1 மேஜை கரண்டி

செய்முறை:

முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி தூவி இறக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.