தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பலாக்கொட்டை கோலா உருண்டை

பலாக்கொட்டைகளை குக்கரில் போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

பலாக்கொட்டை கோலா உருண்டை

Published On :

தேவையான பொருள்கள்:

பலாக்கொட்டை - 20 - 25

பொட்டுக்கடலை மாவு -3 மேஜைக்கரண்டி

பெரிய வெங்காயம் -1

பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி)

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு (நறுக்கியது), கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை, உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.

செய்முறை:

பலாக்கொட்டைகளை குக்கரில் போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். சூடு ஆறியதும் மேல்தோலை நீக்கி, உள்ளிருக்கும் கொட்டைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த பலாக்கொட்டை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை சேர்க்கவும்.

இதனுடன் பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாகப் பிசையவும். உருண்டை பிடிக்கும் பதம் வந்தவுடன், எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை மெதுவாகத் திருப்பி பொரித்து எடுக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.