பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாடாளுமன்றத்தில் போராடும் எம்.பி.க்களுக்கு தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷ்

நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்.பி.க்களுக்கு, இன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்  தேநீர் கொண்டு வந்தார். ஆனால் அவரிடம் தேநீர் பெற இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு எம்.ப

News image
நாடாளுமன்றத்தில் போராடும் எம்.பி.க்களுக்கு தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷ்
Updated On :22 செப்டம்பர் 2020, 3:10 am

ANI


புது தில்லி: நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்.பி.க்களுக்கு, இன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்  தேநீர் கொண்டு வந்தார். ஆனால் அவரிடம் தேநீர் பெற இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு எம்.பி.க்களும் மறுத்துவிட்டனர்.

மாநிலங்களவைக் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்திருந்த எம்.பி.க்கள் தங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும் வரை தர்ணாவை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறார்கள்.

தர்ணாவில் ஈடுபட்டு வரும் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அதனை பெற்றுக் கொள்ள இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் மறுத்துவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.