நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 83,347 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 1,085 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை காலை நிலவரப்படி, நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 56,46,011 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், 45,87,614 போ் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,085 பேர் உள்பட இதுவரை கரோனாவுக்கு 90,020 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,68,377 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஒட்டுமொத்தமாக 6,62,79,462 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை மட்டும் 9,53,683 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


