மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'மகாராஷ்டிரத்தில் வேளாண் மசோதா செயல்படுத்தப்படாது'

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை மகாராஷ்டிரத்தில் செயல்படுத்தாமல் தடுப்பதற்கு போதிய முயற்சிகளை எடுப்போம் என்று அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

News image

'மகாராஷ்டிரத்தில் வேளாண் மசோதா செயல்படுத்தப்படாது'

Updated On :25 செப்டம்பர் 2020, 11:25 am

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை மகாராஷ்டிரத்தில் செயல்படுத்தாமல் தடுப்பதற்கு போதிய முயற்சிகளை எடுப்போம் என்று அம்மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் வேளாண் மசோதாக்கள் குறித்து செய்தியாளர்களிடம் அஜித் பவார் பேசியதாவது, ''மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களால் பயன் இல்லை என்பதால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் கருத்துகள், விவசாயிகளின் குரல்களுக்கு செவிசாய்க்காமல் அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?. வேளாண் மசோதாக்களை மகாராஷ்டிரத்தில் செயல்படுத்தாமல் தடுப்பதற்கு போதிய முயற்சிகளை எடுப்போம்.

இந்த மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டதால், மசோதாக்களின் சட்டபூர்வமான தன்மைகளை மாநில குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்'' என்று அஜித் பவார் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.