பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி: 'வீடுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் விநியோகிக்கத் திட்டம்'

தில்லியில் உள்ள வீடுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் அதனை கண்காணித்து பரிந்துரைக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்

News image
முதல்வர் கேஜரிவால்
Updated On :26 செப்டம்பர் 2020, 7:11 am

DIN

தில்லியில் உள்ள வீடுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் அதனை கண்காணித்து பரிந்துரைக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், ''தில்லியில் தற்போது 24 மணி நேர மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. மழை மற்றும் சேமிப்பு மூலம் தில்லிக்கு கிடைக்கும் நீர் ஆதாரத்தில் அனைத்து மக்களும் சராசரியாக 176 லிட்டர் தண்ணீரைப் பெற முடியும்.

நீர் மேலாண்மையால் இரண்டு கோடி தில்லிவாசிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அது முறையாக பயன்படுத்தப்படவில்லை.
இயற்கையாக கிடைக்கும் நீர் எங்கே போகிறது?. நீர் மேலாண்மையில் தண்ணீர் திருடப்படுகிறது அல்லது கசிந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.

இது நீர் மேலாண்மை சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என்பதையே குறிக்கிறது. இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண தில்லி அரசு ஒரு ஆலோசகரை நியமிக்க முடிவு செய்துள்ளது. 

இது குறித்து ஆய்வு செய்து தண்ணீர் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஆலோசகர் தெரிவிப்பார்'' என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.