தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பா.ஜ.க. மூத்தத் தலைவர் உமா பாரதிக்கு கரோனா

பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி

Updated On :27 செப்டம்பர் 2020, 10:45 am

DIN

பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  
பாஜக மூத்த தலைவரான உமா பாரதி கடந்த மூன்று நாள்களாக தொடர் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஹரித்வார் - ரிஷிகேஷ் மத்தியில் உள்ள வந்தே மாதரம் பகுதியில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.  

அடுத்த நான்கு நாள்களில் அடுத்த கரோனா பரிசோதனை செய்துகொள்ள உள்ளேன். இதில் கரோனா தொற்று குணமடையவில்லை என்றால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவேன்.

இதனால் சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், என்னைச் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்'' இவ்வாறு உமா பாரதி பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.