கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தேவேந்திர பட்னாவிஸ் உடன் சஞ்சய் ராவத் சந்திப்பு

சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார்

Updated On :27 செப்டம்பர் 2020, 12:33 pm

DIN

மும்பை: சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனை ஆகிய கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், பாஜக மாநில தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாஸை சந்தித்து பேசினார். 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், ''தேவேந்திர பட்னாவிஸ் உடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. முன்னாள் முதல்வர், மாநில கட்சியின் தலைவர், பிகார் தேர்தல் பொறுப்பாளர் என்பதால் அவரை சந்தித்து பேசினேன். இருவருக்குமிடையே கருத்தியல் ரீதியாகத்தான் வேற்றுமையே தவிர நாங்கள் எதிரிகள் அல்ல'' என்று கூறினார்.

இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், ''சிவசேனை கட்சியின் செய்தித்தாளுக்காக எனது நேர்காணல் வேண்டி சஞ்சய் ராவத் வந்தார். எனது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நேர்காணல் நடைபெற்றது. இதில் எந்த மாறுதல்களையும் செய்யாமல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'' என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.