புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, அதனை தடுப்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாஜகவின் 40-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, கரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. கரோனா தடுப்பில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் ஒற்றுமையை நேற்று இரவு 9 மணிக்கு அனைவருமே பார்த்தோம். இது ஒரு நீண்ட போராக இருக்கலாம். ஆனால் அதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது. கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மக்கள் இவ்வளவு தீவிரமாகக் கடைப்பிடிப்பார்கள் என்று ஒருவருமே கற்பனை கூட செய்து பார்திருக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


