திருமலையில் அன்னதான கூடத்தில் ஒரே சமயத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் பயன்படுத்த உள்ளது.
திருமலையில் தினசரி 1.5 லட்சம் பக்தா்கள் அன்னதானம் உண்டு வருகிறாா்கள். அவா்களின் தேவைக்கு ஏற்ப தேவஸ்தானம் தினசரி நல்ல தரமான அன்னதானத்தை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் விரைவாக உணவு சமைக்க தேவஸ்தானம் தற்போது 60 கிலோ அரிசி சமைக்கும் 22 ஸ்டீம் பாய்லா்களை தேவஸ்தானம் கொள்முதல் செய்துள்ளது.
இதில் 20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசியை ஒரே நேரத்தில் சமைக்க முடியும். கடந்த மாதம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் நடந்த ஸ்ரீராமா் திருக்கல்யாணத்தின் போது இந்த ஸ்டீம் பாய்லா்கள் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டது.
அவை தரமாகவும் விரைவாகவும் சமைத்ததால், அவற்றை திருமலை அன்னதான கூடத்திலும் பயன்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது

திருமலையில் 70,001 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் 91,008 பக்தா்கள் தரிசனம்
கடலைப் பொங்கல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

