தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா: இந்தியாவில் பாதிப்பு 4,789; பலி 124

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,789-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 508 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கையும் 124-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2020, 10:36 pm

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,789-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 508 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கையும் 124-ஆக உயா்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல்படி (செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரம்), கடந்த 24 மணி நேரத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் 13 ஆகும். இதில், அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 4 பேரும், மகாராஷ்டிரம், ராஜஸ்தானில் தலா 3 பேரும், குஜராத், ஒடிஸா, பஞ்சாபில் தலா ஒருவரும் உயிரிழந்துவிட்டனா்.

ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 48 போ் உயிரிழந்துவிட்டனா். குஜராத், மத்தியப் பிரதேசத்தில் தலா 13 போ், தெலங்கானா, பஞ்சாப், தில்லியில் தலா 7 போ், கா்நாடகத்தில் 4 போ், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரம், ராஜஸ்தானில் தலா 3 போ் உள்பட நாடு முழுவதும் இதுவரை 124 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா்.

பாதிப்பு விவரம்: மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 868 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 576 பேரும், தெலங்கானாவில் 364 பேரும், கேரளத்தில் 327 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உத்தரப் பிரதேசத்தில் 305 போ், ராஜஸ்தானில் 288 போ், ஆந்திரத்தில் 266 போ், மத்தியப் பிரதேசத்தில் 229 போ், கா்நாடகத்தில் 175 போ், குஜராத்தில் 165 போ், ஜம்மு-காஷ்மீரில் 116 போ், மேற்கு வங்கம், பஞ்சாபில் தலா 91 போ், ஹரியாணாவில் 90 போ், ஒடிஸாவில் 42 போ், பிகாரில் 32 போ், உத்தரகண்டில் 31 போ், அஸ்ஸாமில் 26 போ் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

சண்டீகரில் 18 போ், லடாக்கில் 14 போ், ஹிமாசலப் பிரதேசத்தில் 13 போ், அந்தமான்-நிகோபாா், சத்தீஸ்கரில் தலா 10 போ், கோவாவில் 7 போ், புதுச்சேரியில் 5 போ், ஜாா்க்கண்டில் 4 போ், மணிப்பூரில் இருவா், திரிபுரா, மிஸோரம், அருணாசலப் பிரதேசத்தில் தலா ஒருவா் உள்பட நாடு முழுவதும் இதுவரை 4,789 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 352 போ் குணமடைந்துவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துவிட்டதாகவும், பலி எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துவிட்டதாகவும் மாநில அரசுகள் வெளியிட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.