தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போலீஸாருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு: உ.பி. அரசு அறிவிப்பு

உத்தரப்பிரதேச போலீஸாருக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

News image
Updated On :8 ஏப்ரல் 2020, 7:31 am

உத்தரப்பிரதேச போலீஸாருக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு காப்பீட்டுத் தொகையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதன்படி, மாநில போலீஸாருக்கு ரூ.50 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, போலீஸார் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் கூடுதல் சுகாதாரக் காப்பீடு வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்திருந்தது. அதேபோன்று மத்தியப் பிரதேச அரசும் போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.