தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா ஆய்வு: மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னை வருகை

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 10:59 am

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 400 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னைக்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னை விரைந்துள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய குழு ஆய்வு செய்யும் என்று அரசு தெரிவித்திருந்த நிலையில், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்று ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 23,077 ஆகவும் உயிரிழப்பு 718 ஆகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.