புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், தில்லி மற்றும் தென் மாநிலங்களில் குணமடைவோரின் எண்ணிக்கையும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், கரோனாவில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா வெகு தொலைவில் இருந்தாலும் கேரளம், தமிழகம், கர்நாடகம், தெலங்கானா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் அதில் சிறப்பாக உள்ளன.
அதாவது இந்தியாவில் குஜராத், உ.பி., ராஜஸ்தான், ம.பி., மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் குணமடைவோரின் சதவீதம் 15% ஆகவோ அல்லது அதை விடக் குறைவாகவோ உள்ளன. ஆனால் தில்லியில் இது 32.2% ஆக உள்ளது. இங்கு எவ்வாறு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அதுபோலவே குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
கேரளம்.. கரோனாவை ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி வரும் மாநிலமாக உள்ளது. இதுவரை அங்கு கரோனா பாதித்த 450 பேரில் 324 பேர் குணமடைந்துவிட்டனர். இது கிட்டத்தட்ட 74% ஆகும்.
தமிழகத்தில் 1,629 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 662 பேர் குணமடைந்துள்ளனர். இது 40% ஆகும். கர்நாடகமும் 32% ஆக உள்ளது.
ஆனால் குஜராத்தில் குணமடைவோரின் சதவீதம் 7.5% ஆக உள்ளது. குறிப்பாக உ.பி., மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குணமடைவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இங்கு குணமடைவோரின் சதவீதம் 13.95% ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


