தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முழு ஊரடங்கு: சென்னை கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை முதல் ஒரு சில நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 10:05 am


சென்னை: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை முதல் ஒரு சில நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, தங்களது பகுதிகளில் நான்கு நாட்களுக்கு காய்கறி கடைகள் இருக்காது என்பதால், ஏராளமான பொதுமக்களும், இன்று அதிகமான வாடிக்கையாளர்கள் காய்கறிகளை வாங்க கடைக்கு வருவார்கள் என்பதால் ஏராளமான வியாபாரிகளும் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் குவிந்தனர்.

Story image

பொதுவாகவே இன்று காலை முதல் சென்னை உட்பட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் மாநகராட்சிகளில் இருக்கும் சந்தைகளிலும், கடைகளிலும் அதிகமாக கூட்டம் காணப்பட்டது.

Story image

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கிய நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று நகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப். 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு  ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கே.  பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.