தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது: கேஜரிவால்

தில்லியில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 8:08 am

தில்லியில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால், 'தில்லியில் கரோனா பரவலைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தில்லியில் மே 3 வரை ஊரடங்கில் எந்தத் தளர்வும் இல்லை. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மிகவும் கடினமான காலத்தை கடந்து வருகிறோம். தில்லியில் கரோனா பரவலைத் தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா எந்த மதத்திற்கும் பாகுபாடு காட்டாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு இந்து நோயாளிக்கு சிகிச்சையளிக்க முஸ்லிம் நபரின் பிளாஸ்மா பயன்படலாம். கரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். 

தில்லியில் கரோனா பாதிப்பு 2,625 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 54 ஆகவும் உள்ளது. 869 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.