தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆந்திரத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா

ஆந்திர மாநிலத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

News image

கரோனா பாதிப்பு

Updated On :27 ஏப்ரல் 2020, 6:22 am

ஆந்திர மாநிலத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

கரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது: 

ஆந்திரத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,177 ஆக அதிகரித்துள்ளது. இதில் கிருஷ்ணா மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆந்திரத்தில் மொத்தமாக 235 பேர் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 31 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 27,892 ஆகவும் உயிரிழப்பு 872 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.