ஆந்திர மாநிலத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது:
ஆந்திரத்தில் இன்று மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கர்னூல் - 40, குண்டூர்-17, கிருஷ்ணா - 13, கடப்பா-7,நெல்லூர் - 3 அடங்கும்.
இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,259 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணா மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆந்திரத்தில் மொத்தமாக 258 பேர் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 31 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதிப்பு 29,435, உயிரிழப்பு 934 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


