மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 522 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தொடர்ந்து மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. பாதிப்பு நேற்று 8 ஆயிரத்தைக் கடந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 522 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8,590 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதில் 1,292 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் அதிகம் பாதிப்பட்ட பகுதியாக மும்பை உள்ளது. இங்கு 3,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து புணேவில் 660, தானே பகுதியில் 465 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பாதிப்பு 29,435, உயிரிழப்பு 934 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


