தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியாவிலேயே கரோனா பரிசோதனைக் கருவிகள் தயாரிக்கப்படும்: அமைச்சர் தகவல்

கரோனா விரைவு பரிசோதனைக் கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 9:32 am

கரோனா விரைவு பரிசோதனைக் கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று தில்லி சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார் . 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தில்லியில் 13 துணை மருத்துவர்கள், 26 செவிலியர்கள், 24 களப்பணியாளர்கள், 33 மருத்துவர்கள் என 4.11% சுகாதாரப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலை அளிக்கிறது. தற்போது, தில்லியில் சுமார் 100 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை குறைய வேண்டும்' என்று தெரிவித்தார். 

பின்னர், 'இந்தியாவிலே ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களை தயாரிக்க முடியும். இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த பின்னர் இந்தியாவிலே கரோனா பரிசோதனைக் கருவிகள் தயாரிப்புப் பணி தொடங்கும். மே 31-க்குள் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேருக்கு சோதனை என்ற இலக்கை அடைய முடியும்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.