தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜூலை 31 வரை ஐ.டி. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்: மத்திய அரசு

கரொனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 31 வரை (நிறுவனம் அனுமதித்தால்) தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2020, 7:05 am

புது தில்லி: கரொனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 31 வரை (நிறுவனம் அனுமதித்தால்) தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், அனைத்து மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார்.

அப்போது மத்திய அமைச்சர் கூறியதாவது, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற ஏப்ரல் 30ம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், இந்த அனுமதி ஜூலை 30 வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் என்றில்லாமல், அனைத்து மாநில அரசுகளும், இணையம் வழியாக பல்வேறு அரசுப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்று காரணமாக, பல்வேறு பணிகளின் பாணியே மாறிவிட்டது. சுமார் 80% தொழில்கள் வீட்டில் இருந்தே செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது. எனவே, மக்களின் வசதிக்காக, பாரத் நெட் மூலம் இணையச் சேவையை பலப்படுத்துவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும் அவர் தெரவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.