அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது: பிரதமர் மோடி 

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது: பிரதமர் மோடி
அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது: பிரதமர் மோடி


ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ராமர் பிறந்த இடத்தில் இன்று நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்று, ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷத்துடன் உரையைத் தொடங்கினார்.

அவர் பேசியதாவது, உலகம் முழுவதும் இன்று ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீராமர், சீதா தேவியை நினைவு கூறுவோம் என்று கூறிய பிரதமர் மோடி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டார்.

மேலும், என்னை இந்த விழாவுக்கு அழைத்ததற்கு மனமார்ந்த நன்றி.  ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை நான் எனது வாழ்வில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.  
 
பல தலைமுறைகளாக பலர் இந்த ராமர் கோயிலுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். ராமர் கோயிலுக்காக ஏராளமானோர் போராட்டக் களத்தில் இறங்கினர். லட்சக்கணக்கானோரின் போராட்டத்தால்தான் ராமர் கோயில் எனும் கனவு இன்று நனவாகியுள்ளது. ராமர் கோயிலுக்காகப் போராடிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஶ்ரீராமர்- வேற்றுமையில் ஒற்றுமை காணும் இழை

பண்டைக்காலத்தில் வால்மீகி ராமாயணத்தின் மூலமும், அதன் பின்னர்
இடைக்காலத்தில், துளசிதாசர், கபீர், குருநானக் ஆகியோர்
மூலமாகவும், அகிம்சை, சத்தியாகிரகம் ஆகியவற்றின் சக்தியாகத்
திகழ்ந்த மகாத்மா காந்தியடிகளின் பஜனைகளிலும், ஶ்ரீராமர் மக்களுக்கு
வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்ந்தார் என பிரதமர் கூறினார்.

ஶ்ரீராமருடன், புத்த பகவானும் தொடர்புடையவர் ஆவார். அயோத்தி
நகரம், பல நூற்றாண்டுகளாக சமணர்களின் நம்பிக்கை மையமாக
இருந்து வந்தது என அவர் கூறினார். ராமாயணம் பல்வேறு மொழிகளில்
எழுதப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டில் வேற்றுமையில்
ஒற்றுமை என்ற வகையில், அதனை இணைக்கும் பொது நூலாக
ஶ்ரீராமர் இருக்கிறார் என்றார்.

பல்வேறு நாடுகளில் ஶ்ரீராமர் மதிக்கப்படுவதாக பிரதமர் கூறினார்.
அதிக அளவில் இஸ்லாமியர்களைக் கொண்ட நாடான இந்தோனேசியா
மற்றும் கம்போடியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து, இலங்கை,
நேபாளம் ஆகிய நாடுகளில் ராமாயணம் புகழ் பெற்று விளங்குவதாக
பிரதமர் பட்டியலிட்டார். ஶ்ரீராமரைப் பற்றிய குறிப்புகள் ஈரான், சீனா
ஆகிய நாடுகளில் காணப்படுவதாகத் தெரிவித்தார். இதேபோல, ராமர்
கதை பல்வேறு நாடுகளில் வழங்கப்படுவதாக அவர் கூறினார். இந்த
அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்கள் ராமர் கோவில் கட்டுமானம்
இன்று துவங்குவது குறித்து மகிழ்ச்சியாக உணருவார்கள் என அவர்
கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com