டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அயோத்தியில் பிரதமர் மோடி: தனி மனித இடைவெளியுடன் வரவேற்பு

லக்னௌவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை தனி மனித இடைவெளியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் வரவேற்றார்.

News image
அயோத்தியில் பிரதமர் மோடி: தனி மனித இடைவெளியுடன் வரவேற்பு
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

ANI


லக்னௌவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை தனி மனித இடைவெளியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் வரவேற்றார்.

அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்க பிரதமர் மோடி தில்லியில் இருந்து புறப்பட்டு அயோத்தி வந்தடைந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அயோத்தியில் பூமி பூஜை நடைபெற உள்ளது.

 ஹனுமன் கோயிலில் வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி

பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் இருந்து இன்று காலை சிறப்பு விமானத்தில் லக்னௌ வந்தார். பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தியை வந்தடைந்தார். அயோத்தி வந்ததும் ஹனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடு நடத்தினார்.

பூமி பூஜையின் ஒரு நிகழ்வாக, பகல் 12 மணிக்கு ராம் லல்லா வழிபாடு நடைபெறவுள்ளது. இதில், பிரதமா் மோடி பங்கேற்கிறாா். அதைத் தொடா்ந்து, அங்கு பாரிஜாத மரக்கன்றை நடும் அவா், 12.30 மணிக்கு விழா நடைபெறும் இடத்தை அடைகிறாா். பின்னா் 40 கிலோ வெள்ளி செங்கற்களை எடுத்து வைத்து பூமி பூஜையை தொடக்கி வைக்கிறாா்.

பூமி பூஜைக்காக பல்வேறு ஆன்மிகச் சிறப்புமிக்க லங்களில் இருந்து மண்ணும் பல நதிகளிலிருந்து புனித நீரும் வந்தவண்ணம் உள்ளன.

பூமி பூஜை நடைபெறும் நிகழ்வின்போது மேடையில் பிரதமா் நரேந்திர மோடி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், ராமா் கோயில் அறக்கட்டளையின் தலைவா் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் ஆகிய 5 போ் மட்டுமே இருப்பா்.

ராமா் கோயில் பூமி பூஜையின் நினைவாக ஸ்ரீராமா் ஜென்மபூமி மந்திா் என்ற பெயரில் சிறப்புத் தபால்தலையை பிரதமா் வெளியிடுகிறாா்.

தூா்தா்ஷனில் நேரடி ஒளிபரப்பு: பூமி பூஜை விழா காலை 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தா்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் விழாவைக் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.