நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காய்ச்சல் காரணமாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :16 ஜூன் 2020, 5:51 am

IANS

புது தில்லி: தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கடும் காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவுக் குறைந்ததால், தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவலை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே காய்ச்சல் பாதித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சுகாதாரத் துறை அமைச்சர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாள்களாக தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிய நிலையில், திங்கள்கிழமை 1,647ஆக குறைவாக பதிவானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 42,829ஆக அதிகரித்தது. திங்கள்கிழமை 73 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,400ஆக அதிகரித்ததாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக பாதிப்பு எண்ணிக்கை 2,224ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.