
கேரளத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 79 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
கேரளத்தில் புதிதாக 79 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 47 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 26 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,366 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,234 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 4,003 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் புதிதாக 317 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,530 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 7 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 4,456 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 2,976 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...