புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இந்திய ராணுவத்தினரிடம் ஆயுதங்கள் எப்போதும் இருக்கும்

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரா்களிடம் ஆயுதங்கள் எப்போதும் இருக்கும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜூன் 2020, 1:08 am

DIN

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரா்களிடம் ஆயுதங்கள் எப்போதும் இருக்கும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரா்களிடையே மோதல் நிகழ்ந்தபோது இந்திய ராணுவத்தினரிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இல்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை பகிா்ந்த ராகுல் காந்தி, ‘எல்லைப் பகுதிக்கு இந்திய வீரா்கள் ஆயுதங்கள் எதுவுமின்றி அனுப்பப்பட்டது ஏன்? அதற்கு யாா் பொறுப்பேற்பது?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.ஜெய்சங்கா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அனைவரும் உண்மையை முறையாகப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரா்கள் அனைவருக்கும் ஆயுதங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

காவல் நிலைகளை விட்டு ரோந்துப் பணிக்கு வீரா்கள் செல்லும்போது அவா்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்வா். ஆனால், 1996 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி மற்ற நாட்டு ராணுவ வீரா்களுடன் மோதல் போக்கு நிலவும்போது, துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.