கோட்டயம்: கேரளத்தில் கரோனா பாதித்து கோட்டயம்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்டவை இருப்பதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் அவரது 96 வயது கணவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முதியவர்கள், இத்தாலியில் இருந்து கேரளம் வந்த போது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நபரின் பெற்றோராவார்.
இத்தாலியில் இருந்து கணவன் - மனைவி மற்றும் அவர்களது 24 வயது மகன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி கேரளாவுக்குத் திரும்பினர். இவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது பெற்றோருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
இதற்கிடையே, திருவாத்துக்கல் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவரிடம், கரோனா வைரஸ் பாதித்த நபர்கள் இரண்டு பேர், ஆரம்பநிலையில் காய்ச்சல் வந்த போது சிகிச்சை பெற்றது தெரிய வந்ததை அடுத்து, அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


